நேற்று சட்டசபையிலே நடந்த காமெடி ஸீன் ரொம்ப பிரமாதம். நீ எப்படி தேர்தல்ல செயிச்சே எனக்கு தெரியாதா நு ஒருத்தர் கேட்க...நீ நான் இல்லேனா செயிச்சிருக்கவே முடியாதுன்னு இன்னொருத்தர் படம் காட்ட இன்னும் கொஞ்சம் பேச விட்டிருந்தா தமிழக மக்களுக்கு தேர்தல்ல எப்படி செயிச்சாங்க கிற உண்மை தெரிஞ்சிருக்கும்.
பரவாயில்லை. இப்போ விசயத்திற்கு வருவோம். விசயகாந்து இப்போதான் சட்டசபைக்குள்ள முதன் முறையா எதிர்க்கட்சி வரிசையிலே உட்காந்திருக்காரு. ஆனா இந்த அம்மா பல தடவை எதிர்வரிசையிலே உட்காந்து இருக்காங்க. அவருக்கு சபை நாகரிகம் தெரியலை, ஒத்துக்கிடுவோம், இந்த அம்மாவிற்கும், அவங்க ஆளுகளுக்கும் கூட தெரியலையா?
அமைதியா நீங்க பேசி இருக்கலாமே, விசயகாந்து உண்மை நிலை தெரியாம பேசி இருக்கிற மாதிரிதான் மக்களுக்கும் ஏன் பால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினாங்க நு டவுட் இருக்கு. எங்களால கேட்க முடியாது. அவரு கேட்டுட்டாரு. அவ்வளவுதானே விஷயம். இதை அதிமுக நாகரிகமாக சொல்லி இருக்கலாமே.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரே, இந்த மாதிரி நிலைமை இருக்கு, நாம மக்களால தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கோம். அதனால உங்களோட இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டியது என்னோட கடமை. இதுதான் நிலவரம், அதனால ஏத்த வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கோம், அப்படீன்னு விளக்கி இருக்கலாமே.
அவர் ரொம்ப கீழ்த்தரமா நடந்துக்கிட்டாருனு சொல்லக் கூடாது, நாங்க இல்லேனா நீங்க இந்த இடத்துக்கே வந்திருக்க முடியாதுன்னு சொல்ல முடியாது. அவங்க இல்லேனா அதிமுக வும் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது, திமுக பாதி இடத்துல வெற்றி பெற்று இருக்க வாய்ப்பும் இருக்கு. ஒருத்தரை வைச்சுத்தான் இன்னொருத்தர் பதவி கிடைச்சிருக்கு.
இவரோட கூட்டணி வைச்சதுக்கு நான் வருத்தப்படுறேன், வெட்கப்படுறேன் நு சொல்றதெல்லாம் ரொம்ப டூ மச்....
இதை எப்போ சொல்லி இருக்கணும், சட்டசபை தேர்தல் வந்துச்சே அன்னிக்கே சொல்லி இருக்கணும். அன்னிக்கே சொல்லி இருந்தா நிச்சயம் இந்த அம்மாவிற்கு எதிர் வரிசையிலே பாதி திமுக வந்து இருக்கும். அதுக்கு அப்புறம் மைனாரிட்டி அதிமுக அரசு கூட வந்திருக்கும்.
அதுனால அவசரப்பட்டு வார்த்தைகளை விடுறதா இன்னமும் இந்த அம்மா விடலைனு ரொம்ப நல்லாவே தெரியுது. அதை மாதிரி எதிர்கட்சித் தலைவரா இப்படி ஒருத்தர் இருந்தாதான் நல்லதுன்னு பாதி பேரு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அந்த அளவிற்கு நேற்று நடந்த விவாதம் இருக்குது. எதிர் கட்சி தலைவரா இருந்த மனுஷன் நியாமான கோரிக்கையை த்தான் வச்சாரு. அவர் கேட்ட அந்த கேள்வி கோடானு கோடி தமிழக மக்களின் எண்ண ஓட்டம்தான். அதில் எந்த வித மாற்று கருத்துமில்லை.
விசயகாந்து நாக்கை துருத்திக் கொண்டு கையை ஆட்டி பேசினார் என்று மட்டுமே ஒரு சில ஊடகங்களில் வருகின்றது. ஆனால் அவர் நாக்கை துருத்திக் கொண்டு பேசும் அளவிற்கு எதிர் தரப்பில் இருந்து யார் யாரெல்லாமோ கூக்குரலிட்டார்களே, அவர்கள் மீது அந்த சபை என்ன நடவடிக்கை எடுத்தது. எதுவுமே இல்லையே!!!!





5 கருத்துக்கள்:
you are right
This news is reasonable...விசயகாந்து நாக்கை துருத்திக் கொண்டு கையை ஆட்டி பேசினார் என்று மட்டுமே ஒரு சில ஊடகங்களில் வருகின்றது. ஆனால் அவர் நாக்கை துருத்திக் கொண்டு பேசும் அளவிற்கு எதிர் தரப்பில் இருந்து யார் யாரெல்லாமோ கூக்குரலிட்டார்களே,..you made us to to Think... எதிர்கட்சித் தலைவரா இப்படி ஒருத்தர் இருந்தாதான் நல்லதுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க....
நீங்க தான் சரியா சொல்லி இருக்கீங்க.எதிர் வரிசையில என்ன சொன்னாங்க என்பது தெரிய வில்லையே ...? மக்களோட கேள்விகளை கேட்க இவரால மட்டும் தான் முடியும்
மக்கள் பணத்தை வச்சு இப்படி காமடி ஷோ நடத்துறாங்க...
பிரச்சினையே நம் மக்கள் தானே..........இடை தேர்தல் என்றால் கண்டிப்பாக பணம் விளையாடும்...........சங்கரன் கோவில் கிராமங்கள் அதிகம் உள்ள பகுதி.............பணத்தை வாங்கி கொண்டு மக்கள் கண்ணை மூடி கொண்டு ஆளும் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள்............நம் மக்களை திருத்த முடியாது...........பரவாயில்லை பெரிய ஆப்பு ஒன்னு காத்திருக்கிறது.............இப்பொழுது ரயிலஅகழி அதிகம் பேர் போவதால் பஸ் கட்டணம் இன்னும் அதிகம் பேரை பாதிக்க வில்லை என்று கூற வேண்டும் ........மின்சார கட்டணம் கூடும் பொழுது தான் ..அது அதிகம் கிராம மக்களை பாதிக்கும் என நினைக்கிறேன்...தச்சை கண்ணன்
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...தமிழ்மணம் ஓட்டைப்போட்டு என்னையும் தூக்கி விடுங்க பாஸ்