பங்காளிங்க..

Friday, March 23, 2012

இது என்ன இழவு அலையன்சோ? ஒன்னும் புரியலை?

 
அது ஒரு மிகப் பெரிய நிறுவனம், இந்தியாவிலேயே இதனுடைய ஆதிக்கம் அதிக அளவு இருக்கின்றது. அது மக்களின் வசதிக்காக லைப் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றையும் தொடங்கியது. வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அது தமிழ்நாட்டினில் வேறு ஒரு நிறுவனத்தோடு கை கோர்த்து கொண்டது. உண்மையில் அந்த சின்ன நிறுவனம் இந்த பெரிய நிறுவனத்தோடு கை கோர்த்து கொண்டு, எம்எல்எம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதுனுடைய விளைவு அந்த பெரிய நிறுவனத்தின் பெயரினை சொல்லி இந்த சின்ன நிறுவனம் தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கும் அனைத்து சிறு குறு வியாபாரிகளை ஆசை வார்த்தை சொல்லி மோசடி செய்தது.

கடைசியில் அந்த சின்ன நிறுவனம் தனக்கு உரிய வருமானம் கிடைத்ததும் தனியாக கழண்டு கொண்டு விட்டது. தற்போது அந்த பெரிய நிறுவனத்தில் பணம் போட்டவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய ஆப்பு வைத்து விட்டார்கள். அதாவது பணம் போடும் போது முதல் மூன்று வருடம் கட்டினால் போதும், மூன்றாவது வருடம் கழித்து நீங்கள் விரும்பினால் தொடரலாம், ஆனால் அந்த மூன்று வருடத்திற்கு பிறகு உங்களுக்கு மேலும் இரண்டாயிரம் ரூவாய் கிடைக்கும் என்று சொன்னதால் பல வியாபாரிகள் ஆசையில் கஷ்டப்பட்டு பணத்தை போட்டு விட்டு மூன்று வருடம் கழித்து போய் அந்த பெரிய நிறுவனத்திடம் கேட்டால்  இது பண்ட், இது பாலிசி கிடையாது, மார்கெட்டுல பங்கு எப்படி இருக்கோ, அப்படித்தான் நிலைமையும் இருக்கும் என்று சொல்லி அவர்கள் போட்ட பணத்தில் பாதிதான் தற்போது இருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றார்கள். பாவம் ஏழைகள் குருவி சேர்த்தாற்போல் போல் சேர்த்து அவர்களிடம் சென்று ஏமாந்ததுதான் மிச்சம். 

அந்த மிகப் பெரிய நிறுவனம் பஜாஜ் அலையன்ஸ், அந்த சிறிய நிறுவனம் டிஎல்சி என்பதாகும். அந்த டிஎல்சி நிறுவனம்தான் பஜாஜின் பாலிசி திட்டத்தோடு அவர்களது எம்எல்எம் திட்டத்தை அறிமுகப் படுத்தி தவறான தகவல்களை ஏழைகளிடம் சென்று சேர்த்து இன்று பலர் ஏமாந்து போய் இருக்கின்றார்கள்., 

எனக்கு தெரிந்து ஒரு செருப்பு வியாபாரி வருடம் 10000 வீதம் மூன்று வருடத்திற்கு 30000 கட்டி விட்டார். தற்போது அவரது மகள் பூப்பெய்து விட்டாள். அதற்க்கு சின்னதாய் ஒரு விழா எடுத்து நடத்த ஆசைப்பட்டு அந்த பணத்தை எடுக்க சென்ற போது பஜாஜ் அலையன்சில் வெறும் 18000 மட்டுமே இருக்கின்றது. மார்கெட்டில் தற்போது உங்கள் பங்கிற்கு இவ்வளவுதான் வந்திருக்கின்றது. நீங்கள் உங்கள் பணத்தை 25 வருடத்தில் எடுக்கும் போது முழு பணம் கிடைக்கும் என்று சொன்னார்களாம். அவருக்கு வயது தற்போது 60 , இன்னும் 83 வயது வரை அவர் உயிரோடு இருந்தால் அந்த பணத்தை அவர் எடுத்து கொள்ளலாம். அப்படித்தானே? ஏன் இப்படி ஏமாற்றினீர்கள் என்று அவர் பஜாஜ் அலுவலக ஊழியரிடம் கேட்டதற்கு இதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல, வேண்டுமானால் அந்த டிஎல்சி இடம் சென்று கேட்டு கொள், முடிந்தால் வழக்கு போட்டு செயித்து கொள் என்று அசால்ட்டாய் பதில் அளித்திருக்கின்றார்கள். மேலும் எங்களுக்கு இதை போல தினமும் ஆயிரம் பேர் வந்து கேட்கின்றார்கள், எல்லோருக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது என்றும் பேசி இருக்கின்றார். 

அப்படி எனில் அந்த செருப்பு வியாபாரி போல ஆயிரமாயிரம் அப்பாவிகள் ஏமாற்றப் பட்டிருக்கின்றார்களா? அடப்பாவிகளா, மனிதர்கள், அதுவும் ஏழை மனிதர்கள் அதுவும் உங்களை நம்பி, உங்கள் நிறுவனத்தை நம்பி ஏமாந்து போயிருக்கின்றார்கள், அவர்களை ஏமாற்றி விட்டு நீங்கள் மட்டும் நிம்மதியாய் வாழுகின்றீர்களா? உங்களுக்கே இது அநியாயம், பாவம்  என்று தெரியவில்லையா? மற்றொருவர் கூலித் தொழிலாளி, வருடம் 5600 என்று கட்டினாராம். அவரிடம் அந்த டிஎல்சி நிறுவன ஏஜெண்டுகள் 3  வருடம் கழித்து 5600 +5600 +5600 +1750  ரூவாய் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு கீழே இரண்டு பேரை சேர்த்து விடுங்கள், அதில் இருந்து உங்களுக்கு 500  ரூவாய் வரும் என்று ஒரு அட்டையை கொடுத்து விட்டு போயிருக்கின்றனர். அவரும் தனது சக ஊழியர்களை இணைத்து விட்டிருக்கின்றார். கடைசியில் எல்லோருக்கும் பண ஏமாற்று வேலை என்று தெரிந்ததும் அந்த முதியவர் நண்பர்களை பார்க்க கூச்சப் பட்டுக் கொண்டு நேற்று மாரடைப்பில் காலமானார்.

இந்த பஜாஜ் அல்லையன்ஸில் போய் அந்த சக நண்பர்கள் கேட்டதற்கு நீ ஏமாந்தே, அதுக்கு நான் என்ன செய்ய முடியும், போய் எமாத்துனவன கேளு என்று சொல்லி இருக்கின்றார்கள். இப்படி ஏழைகள் வயிற்றில் அடித்து பிச்சை எடுப்பதற்கு அவர்கள் தெரு தெருவாக பிச்சை எடுக்கலாமே...இது எல்லாமே பாவக் காசுதானே......

8 comments:

  1. ITS WE WHO HAS TO READ OR ASK THEM TO GIVE THE POLICY DOCUMENTS IN TAMIL BEFORE DECIDING ANYTHING.

    ALL THESE POLICIES ARE LINKED TO EQUITY AND WORK DEPENDS ON THE MARKET CONDITION, THE MISTAKE IS MOSTLY ON THE BUYERS SIDE. i AM NOT SUPPORTING THE SELLER BUT THEY ARE WITHIN THE LIMITS OF THEIR POLICY. WE HAVE TO READ THE OFFER DOCUMENTS AND THINK BEFORE WE DO

    ReplyDelete
  2. இவர்கள் மட்டுமல்ல மற்றமோர் கம்பெனி உண்டு. அது கோடக் மகிந்திரா. நான் கோடக்கில் 5 வருடங்களுக்கு முன் மாதம் 2000 வீதம் மூன்று வருடங்கள் மொத்தம் 72 ஆயிரம் கட்டினேன் தற்போது 5 வருடங்கள் ஆகிறது. என்னுடைய கணக்கில் இருக்கும் தொகை 42 ஆயிரம் மட்டுமே.

    ReplyDelete
  3. insurance company will not invest ur entire premium in the fund, they will deduct mortality and other charged which will approx cut 30% of ur premium and later every month they deduct 1-3% for fund maintenance for fund value, at any given time ur fund will not achieve any thing substantial

    ReplyDelete
  4. என்னையும் ஆறு வருஷமா எதுலயாச்சும் சிக்க வெச்சுடுறதுன்னு அலையுறாய்ங்க...நல்ல வேளையா நான் மாட்டலை.

    ReplyDelete
  5. /// DHANS said...

    ITS WE WHO HAS TO READ OR ASK THEM TO GIVE THE POLICY DOCUMENTS IN TAMIL BEFORE DECIDING ANYTHING.

    ALL THESE POLICIES ARE LINKED TO EQUITY AND WORK DEPENDS ON THE MARKET CONDITION, THE MISTAKE IS MOSTLY ON THE BUYERS SIDE. i AM NOT SUPPORTING THE SELLER BUT THEY ARE WITHIN THE LIMITS OF THEIR POLICY. WE HAVE TO READ THE OFFER DOCUMENTS AND THINK BEFORE WE DO ///

    அன்புத் தோழரே,

    நன்றாக படித்தவர்களிடமே டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் என்ற பெயரில் ஏமாற்று வேலையை செய்வார்கள். அப்படி இருக்கும் போது படிக்காத பாமரர்கள் என்ன செய்வார்கள்??

    ReplyDelete
  6. /// Anonymous said...

    இவர்கள் மட்டுமல்ல மற்றமோர் கம்பெனி உண்டு. அது கோடக் மகிந்திரா. நான் கோடக்கில் 5 வருடங்களுக்கு முன் மாதம் 2000 வீதம் மூன்று வருடங்கள் மொத்தம் 72 ஆயிரம் கட்டினேன் தற்போது 5 வருடங்கள் ஆகிறது. என்னுடைய கணக்கில் இருக்கும் தொகை 42 ஆயிரம் மட்டுமே. ///

    தோழரே, நீங்கள் படித்தவரா அல்லது படிக்காதவரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பஜாஜ் அலையன்ஸில் பணம் போட்டால் 3 வருடம் கழித்து கூடுதலாய் 2000 கிடைக்கும் என்பதே அவர்களிடம் சொல்லி ஏமாற்றப் பட்டுள்ளது. அதை மட்டுமே நம்பி அவர்கள் பணம் போட்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  7. /// Thirumurugan MPK said...

    insurance company will not invest ur entire premium in the fund, they will deduct mortality and other charged which will approx cut 30% of ur premium and later every month they deduct 1-3% for fund maintenance for fund value, at any given time ur fund will not achieve any thing சுப்ச்டன்தியால் ///

    நண்பரே, நீங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியின் செயல்பாடுகள் பற்றியும், பண்டு பற்றியும் சொல்லி இருக்கின்றீர்கள். நன்றி. படிக்காதவர்களுக்கு 100 ரூவாய் போட்டால் 110 ரூவாய் கிடைக்கும் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். எனக்கு தெரிந்து அந்த டிஎல்சி ஊழியர்கள் அல்லது ஏஜெண்டுகள் மேலே சொன்ன அந்த பொய்யான தகவலை மட்டும் சொல்லி இதில் லாபம்தான், நட்டம் கிடையாது என்று சொல்லி ஏமாற்றி இருக்கின்றார்கள். 30000 ரூவாய் போட்ட அந்த செருப்பு வியாபாரிக்கு தற்போது 12000 ரூவாய் நட்டம். அவருடைய எத்தனை வருட உழைப்பு, அந்த முதியவரின் உயிர். இதற்கெல்லாம் என்ன காரணம்?

    ReplyDelete
  8. /// திருவாரூர் சரவணன் said...

    என்னையும் ஆறு வருஷமா எதுலயாச்சும் சிக்க வெச்சுடுறதுன்னு அலையுறாய்ங்க...நல்ல வேளையா நான் மாட்டலை. ///

    நன்கு விசாரித்து சேருங்கய்யா, பயபுள்ள கண்ணுல விளக்கெண்ணைய ஊதிக்கிட்டு திரியுரானுங்க, இப்போ சொல்றேன், அந்த முதியவர கொன்னது ஒட்டுமொத்த டிஎல்சி ஊழியர்களும், பஜாஜ் அலையன்சும்தான். மானம், மருவாதை இருக்கிறவன்தான் தப்பு செய்ய மாட்டானுங்க...அவர் மனுஷன், இப்போ தெய்வமாயிட்டாரு. எப்படி ஏமாத்திட்டு இன்னமும் வெக்கமே இல்லாம காசுக்கு அலையுரானுங்க னு தெரியல, கேட்டா பிசினெஸ் டிரிக்கு ஒரு டயலாக்கு வேற..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...