பங்காளிங்க..

Friday, June 29, 2012

ஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்????

என்ன தலையை சுத்துதா? 

இது ஏதோ வெளிநாட்டு சரக்கோ அல்லது ஏதாவது பிரபலம் குடிச்ச எச்சி பாக்கெட் ஏலத்துல வந்ததோ கிடையாதுங்க..நம்ம உள்ளூருல ரெடியான போலி ஐஎஸ்ஐ முத்திரை மாடல் குத்தின ஆடுனரி காலி வாட்டர் பாக்கெட்டு தாங்க???

போன வாரம் வரை நம்ம சென்னையிலே அடிச்ச வெயில்ல அவனவன் தண்ணிக்கு என்னமா அலைஞ்சானு அவனுகளுக்குத் தான் தெரியும்..கிடைச்ச ஜூசை எல்லாம் குடிச்சி வைச்சானுங்க..வாட்டர் பாக்கெட் 3 ரூவாய் நா கூட வாங்கி குடிச்சானுங்க.

அப்படி எவனோ அல்லது எவளோ குடிச்சி போட்ட காலி வாட்டர் பாக்கெட்டோட விலைதான் இன்னிக்கு 68750 ரூவாய்??!!!??

அதுல என்னாங்க அப்படி ஒரு விசேசம், அந்த பாக்கெட்டு தங்கத்துல செஞ்சதாங்க, இல்லையே...அப்புறம் எப்படி???


போன வாரம் வரைக்கும் வெயிலுக்கு தாகத்துக்கு குடிச்சிட்டு ரோட்டுல போட்ட காலி பாக்கெட்டுல நேத்திக்கு பெய்ஞ்ச சின்ன தூறல்ல நல்லா வழு வழு னு மின்னிக்கிட்டு இருந்துச்சி..

ஐயையோ, மழை பெய்ய ஆரம்பிச்சிட்டே னு ஒரு குடும்பம் (அப்பா, 3 வயசு பொண்ணு , அந்த பொண்ணோட அம்மா ) பைக்குல வேகமா போயி அந்த ரோட்டுல மின்னிக்கிட்டு இருந்த காலி வாட்டர் பாக்கெட்டுல ஏறியதும் சும்மா காஷ்மீர் பனிச் சறுக்குல சறுக்குற மாதிரி சும்மா பத்தடி தூரத்துக்கு சறுக்கி போக மூணு பேரையும் ஆம்புலன்சுல தூக்கி போட்டு தனியார் ஆசுபத்திரி போனாங்க..அங்கே மூணு பேருக்கும் பார்த்த வைத்தியத்துக்கு வந்த பில்லுதாங்க இந்த 68750  ரூவாய்.

இப்போ சொல்லுங்க வாட்டர் பாக்கெட்டோட விலை கரெக்ட்டுதானே?


நான் இதை சொன்னதும் என்னோட பிரண்டு ஒரு விஷயம் சொன்னான்? காலி வாட்டர் பாட்டில் 14300 ரூவாய் னு.. அதை அவன் வாங்குனானாம், ஒரு வாட்டர் பாட்டில் காத்துல உருண்டு வந்துச்சாம், இவனோட பைக்கு அதுல ஏறினதும் இவன் ஜிஹெச்சு  வில கிடந்தானாம், இவனோட கை அகால மரணம் அடைஞ்சதால கைக்கும், கழுத்துக்கும் மாலை போட்டு (அதாங்க ஹான்ட் பிராக்சர்) கூடவே வாட்டர் பாட்டிலுக்கு பில்லு 14300  போட்டு அனுப்பி வைச்சிட்டான்களாம்...

ஆனா இதுல பாருங்க...காலி வாட்டர் பாட்டிலை விட காலி வாட்டர் பாக்கெட்டுக்கு விலை ஜாஸ்திங்க, பொது மக்களே நீங்க 2 ரூவாய்க்கு வாங்கி தூர போடுற வாட்டர் பாக்கெட்டு இன்னொருத்தன் குடும்பத்துக்கு ஆயிரக்கணக்குல, சில சமயத்துல லட்சக்கணக்குல கூட   செலவாகி போகுது.

அதுனால மக்களே, தண்ணி நிறைய குடிங்க, ஆனா குடிச்ச கையோட அந்த வாட்டர் பாட்டில அல்லது வாட்டர் பாக்கெட்டை  குப்பை தொட்டியிலே போடுங்க.. முடிஞ்சா பாதுக்காப்பா தூர போடுங்க

பாவம் அது குழந்தை, இன்னமும் வலியால துடிச்சிக்கிட்டுத் தான் இருக்கு. அதுவே நம்ம குழந்தையா இருந்தா என்ன பண்ணுவீங்க????

Tuesday, June 26, 2012

ஒரு பையன்! ரெண்டு பொண்ணு!!!!

ஆணும் பெண்ணும் சரி சமம் என்று எந்த அர்த்தத்தில் பாரதியார் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் இன்று ஆண்களை, ஆண் நண்பர்களை மிஞ்சும் அளவிற்கு கல்லூரி, பள்ளிப் பெண்களின், இளைஞிகளின் நிலை மாறிக் கொண்டு வருகின்றது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த விஷயம் சர்வ சாதாரணமாய் பரவி வருவது கலாச்சார ஆரோக்கியத்திற்கு உகந்ததாய் தெரியவில்லை. ஒரு இளைஞன் ஒரு இளைஞி யோடு சுற்றுவது என்பது தற்போது மிகவும் அரியதாகி விட்டது. குறிப்பாய் கல்லூரிகளில் வலம் வரும் கல்லூரித் தோழிகள் உடன் இருக்கும் தோழிகளை அவனது காதலனோடு சேர்த்து வைக்க செய்யும் அலம்பல்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றது,

சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரு பையன் ரெண்டு பொண்ணு என்ற விகிதாரத்தில் தான் சுற்றுகின்றார்கள். இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த பையனின் காதலியாம், மற்றொருத்தி தோழியின் காதலுக்கு கூடவே இருக்கும் தூதுவாம். நடமாடும் தூதுவர்  என்ற போஸ்டிங்கில் கூடவே ஒட்டியிருக்கும் அந்த தோழி எந்த காதலிலும் ஈடுபடாமல் நல்ல பிள்ளை போன்று வீட்டில் இருந்து கொள்வாள். ஆனால் அவளது தோழியிடம் மட்டும் ஏய், அவன் உன்னைத்தாண்டி பாக்குறான், உன்கிட்டே பேசணும்னு ஆசைப்படுறான், நீ இல்லேனா அவன் செத்திடுவாண்டி, அவனோட காண்டாக்ட் நம்பர் தாரேன், ஒருவாட்டி பேசிப் பாரு, பிடிக்கலேனா விட்டுடு என்று சொல்லி உசுப்பேத்தி விடும் வேலை. இந்த வேலையை செய்வதற்கு அந்த பையன் இவளுக்கு செல் போன்,  ஆனால் இந்த காதலிக்கும் பெண்ணின் வாழ்க்கையை நிர்ணயிப்பவள் இந்த தூது செல்லும் பெண்தான்.

அவளுடைய காதலன் தற்போது எங்கு இருக்கின்றான்? அவன் தற்போது எந்த தியேட்டரில் இருக்கின்றான்? எந்த பிரவ்சிங் சென்டரில் உட்காந்திருக்கின்றான்? எந்த கடையினில், எந்த ஹோட்டலில், எந்த பார்க்கில் இருக்கின்றான் என்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பது தான் இந்த பெண்ணின் வேலை. கிட்டத்தட்ட "அத்தை" (மாமாவிற்கு எதிர்ப்பதம்) வேலை பார்த்துகொண்டிருப்பாள். கேட்டால் அவன் அவள் மீது உயிரையே வைத்திருக்கின்றான் என்று கதை விடுவது. அடிக்கடி குரூப் ஸ்டடி என்று அழைத்து கொண்டு அவளை அவனது காதலனோடு சேர்த்து வைப்பது,

பசங்களும் அதைத்தானே செய்கின்றார்கள், நாங்கள் செய்தால் அதில் என்ன தவறு இருக்கின்றது? இது ஆணாதிக்கம் என்று ஒரு சிலர் குமுறுவார்கள். பசங்களும் இதே தவறை செய்வார்கள்? ஆனால் பிரச்சினை என்று வரும் போது போலீஸ் ஸ்டேசன் வரை கூட வரத் தயாராவார்கள். ஆனால் பெண்களால், இந்த தோழிகளால் வர முடியுமா? நான்கு பசங்க சேர்ந்து காதல் திருமணம் நடத்தி வைத்த வரலாறு பல உண்டு!!!! ஆனால் நாலு தோழிகள் சேர்ந்து தனது தோழிக்கு திருமணம் செய்து வைத்து கடைசி வரை கூடவே நின்ற காதல்கள் மிக மிக குறைவு.

இந்த காதல் உடந்தைக்கு அந்த தோழிகளுக்கு கிடைக்கும் சன்மானம் என்பது செல் போன், செல் போன் ரீ-சார்ஜ், அவ்வப்போது சாப்பாடு, சுடிதார், சாரி, தியேட்டரில் இலவச படம், கோன் ஐஸ்.

இதற்க்கு பரிகாரமாய் அவர்கள் செய்வது தோழியை இழுத்து விடுவது, அவ்வப்போது குரூப் ஸ்டடி என்ற போர்வையில் வீட்டினில் இருந்து வெளியே அழைத்து வருவது, கான்பரன்ஸ் கால் போட்டு கொடுத்து காதலன், காதலியை பேச செய்வது, காதலன் எந்த தொந்திரவுமின்றி காதல் (சில சமயங்களில் காமம்) செய்ய கூடவே இருப்பது போன்றவை.


இந்த மாதிரியான விசயங்களால், அந்த காதலியால் உண்மையான காதலனை பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போகின்றது. காரணம் நமது தோழிக்கு தான் அவனை பற்றி எல்லாமே தெரியுமே என்ற நம்பிக்கையில் தன்னையே இழக்கும் பரிதாபங்கள் பல இன்று சென்னையில் இருக்கின்றது.

ஆகவே பெற்றோர்கள் தனது மகளின், மற்றும் மகளின் தோழிகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் கொள்ளல் வேண்டும். தற்போதைய சூழல் அவ்வாறு உள்ளது. என் மகளை நான் சந்தேகப் படுவதா? என்று கேட்டால் அப்புறம் காலம் முழுவதும் நாம் எல்லோரையுமே சந்தேகப் பட வேண்டியிருக்குமே! தன மகளின் எதிர்காலத்திற்கு, அவளது வசந்த காலத்திற்காக நாம் அவளின் நடவடிக்கைகளில் கவனம் அல்லது அக்கறை கொண்டால் அவள் என்றுமே நம்மோடு இருப்பாள். இல்லையெனில்?????? அவள் பறந்து போனாளே...!!!

அப்படியெனில் நீ காதலுக்கு எதிரியா என்று கேட்காதீர்கள். காதலன், காதலி நேரிடையாக சந்தித்து காதல் செய்யுங்கள். தூதுவரை மட்டும் நம்பி காதல் செய்யாதீர்கள்.

Monday, June 18, 2012

நம்ம "நிலா" வா இது? நம்பவே முடியலைப் பா!


சமீபத்துல இணையத்துல வாடகைக்கு வீடு  தேடிக்கிட்டு இருந்தப்ப ஒரு சில படங்களை பார்த்தேன், எங்கயோ பார்த்திருக்கேனே னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...நிலா வ இவ்வளவு குளோஸ் அப்புல பார்த்ததை நினைச்சு பிரமிச்சு போயிட்டேன்... உடம்பெல்லாம் புல்லரிச்சு போயிடுச்சு. நீங்களே அந்த கண்ராவிய பாருங்களேன்..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

நான் சொல்றது ஆகாயத்துல இருக்கிற "நிலா" ங்க? நீங்க என்னை அனாவசியமா தப்பா கற்பனை பண்ணிடாதீங்க..


ச்சே ஏன் இவ்வளவு கன்றாவியா இருக்குனே தெரியலையே???
சினிமா, டிவி, புக்குலே எல்லாம் எவ்வளவு அழகா இருக்கா, ஆனா  இவ்வளவு  நெருக்கத்துல ரொம்ப கண்றாவியா இருக்காளே...நான் கூட பல நாள் நைட்டு அவளை நினைச்சு தூங்காம 
இருந்திருக்கேன்...நான் கவிஞர்கள் வர்ணிச்ச இந்த நிலாவை நினைச்சுத் தான் தூங்காம இருந்தேன் க..



கடைசியிலே இப்படி ஏமாத்திபுட்டாலே னு நினைச்சா கவலையா இருக்கு.


*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

அதுக்கப்புறமா நான் பிரமிச்ச அந்த படங்களை என்னோட அம்மாகிட்டே காண்பிச்சேன்..அவங்க கொஞ்ச நேரம் உத்து பார்த்திட்டு, "அடேய், உனக்கு வேற வேலையே இல்லையா ?..அம்மாவையே டெஸ்ட் பண்ணி பாக்குறியா?

ஏன்டா நம்ம வீட்டு பால் பாத்திரம், இருப்பு சட்டி எல்லாம் இவ்வளவு கன்றாவியா இருக்குனு ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுறியா, மவனே...உன்னை? என்று கம்பெடுத்து அடிக்க வந்துட்டாங்க பா..

அட இது நம்ம வீட்டு பாத்திரத்தோட அடிப் பாகமா? நான் கூட நிலாதான் நினைச்சிட்டேன் என்று  தலையை சொறிந்தேன் ????


Friday, June 15, 2012

டெங்கு க்கு மருந்து வேணுமா? இதை படிங்க

காங்கிரசுக்கு அப்புறம் தமிழ்நாட்டு மக்களை பாடா படுத்தினது இந்த டெங்கு காய்ச்சல்தாங்க...

ச்சே, நம்ம உறவுகள்  50 க்கும் மேல சாகடிச்சிடுச்சே!!!. குறிப்பா இந்த கோடை மழை பெய்ஞ்ச ஊருல மட்டும் டெங்கு சும்மா புகுந்து விளையாடிடுச்சு...சென்னையிலே அந்த அளவுக்கு டெங்கு வரலை, என்ன காரணம்? ஏன்னா அங்கேதான் மழையே வரலையே...வெயிலு சும்மா பத்திக்கிட்டு எரியுதே. பிறவு எங்கிட்டு இருந்து டெங்கு வைரஸ் பரவும். அடிக்கிற வெயில்ல மனுசனே புழு மாதிரி பொசுங்கி சாவுறான்...அப்புறம் அந்த வைரஸ் எங்கே தலை எடுக்கும், நல்ல வேலை மெட்ராசுல மழை வரலையேன்னு நினைச்சி சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான்...
 
சரி இந்த டெங்கு பீவர் எங்கே இருந்து வருது? ஏற்கனவே பெய்ஞ்ச மழைத் தண்ணி தேங்கி...அது சாக்கடைத் தண்ணியா மாறி அதுல உற்பத்தி ஆகுற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணமாம்...இது எங்களுக்கு தெரியாதா..எத்தனை தடவை படிச்சிருக்கோம்னு சொல்றீங்களா...கோச்சிக்காதீங்க.. இது புதுசு...தண்ணி எங்கே தேங்கி இருந்தாலும் இந்த கொசு  உற்பத்தியாகுமாம்..உதாரணமா வாட்டர் பாட்டில், டம்ளர், கட் பண்ணி வச்சிருக்கிற வாட்டர் பாக்கட், இப்படி எங்கே இருந்தாலும் அந்த கொசு முட்டை போட்டு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுமாம்..

சரி, இதுக்கு என்னதான் வழி? உங்களை மாதிரிதான் நானும் முழிச்சுகிட்டு இருந்தேன் போன வாரம் வரைக்கும். ஆனா இப்போ கொஞ்சம் தெம்பு வந்திருக்கு. ஊருல என்னோட பிரண்டோட தங்கச்சிக்கு டெங்கு டொங்குனு வந்திடுச்சு..

வழக்கம் போல சொந்தக்காரங்க எல்லோருமா போன் போட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க..நானும் தான் விசாரிச்சேன்..ஆனா நான் நேருல போயிட்டேன். ஊருக்கு போனப்ப அந்த பொண்ணோட அம்மாபாட்டியும் வந்திருந்தாங்க...எல்லோரும் என்ன செய்யிறதுன்னு தவிக்கிறப்ப, அந்த அம்மா அவங்களோட கைப்பக்குவத்தை ஆரம்பிச்சாங்க...
  1. வீட்டுல இருக்கிற அனாவசியமா தேங்கி இருக்கிற தண்ணிய அடைச்சு வைச்சாங்க.
  2. பால் பாக்கட் சேர்த்து வைச்சதை உடனே காலி பண்ணாங்க...ஏன்னா அந்த பால் பாக்கட்டுல ஓட்டிகிட்டு இருக்கிற  ஈரப்பசைல கூட கொசு வந்திடுமே.
  3. அடுத்தது வீட்டை சுத்தி எப்பவுமே மருந்து தெளிச்சுக்கிட்டே இருந்தாங்க..
  4. முத இரண்டு நாளா அசதியா இருந்த சின்னப்பொண்ணு கொஞ்சம் தெளிவாயிடுச்சு
  5. அடுத்தது ரொம்ப முக்கியமான ஒன்னு வீட்டுல எந்த இடத்திலேயும் ஈரத்துணிய நனைச்சு வைக்கவே இல்லை..
  6. அதுக்கப்புறமா ரொம்ப முக்கியமான விஷயம் பப்பாளி பழம் இலை இருக்கே, அந்த இலைய நல்லா அரைச்சு சாறு எடுத்தாங்க, அது நாத்தம் குடலை புடுங்குச்சு, அதை சூடு பண்ணலை, வெந்நில கூட வைக்கலை, அதை பச்சைத் தண்ணியோட கலந்து சாறு எடுத்து அதை குடிக்க சொன்னாங்க, ஒரு இலைய அரைச்சா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்குத்தான் சாறு வந்தது, ரெண்டு டேபிள் ஸ்பூன் சாரை எடுத்து கொடுத்தாங்க..
  7. அப்புறமா மதிய நேரம் ஒரு பப்பாளி பழ ஜூஸ் போட்டு கொடுத்தாங்க, என்ன ஆச்சரியம், ரெண்டு நாளுக்கு அப்புறம் எடுத்து பார்த்த பிளட் டெஸ்ட்ல நல்ல மாற்றம் தெரிஞ்சுதாம்..
  8. டாக்டர்ஸ் பேசன்ட்டோட பாட்டி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டாங்க, அதுக்கப்புறமா வர்ற பேசன்ட்டுக்கிட்ட எல்லாம் இதையே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்..
எல்லோருக்கும் இது தெரியுமோ, தெரியாதோ எனக்கு தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உங்ககிட்டே சொல்லிடுறேன், வெறும் பப்பாளி ஜூஸ் குடிச்சா தப்பு இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன்..அதுனால நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இதை சொல்லிக் கொடுங்க..
 
டெங்குக்கு நான் மருந்து சொல்லிட்டேன், காங்கிரசுக்கு நீங்கதான் மருந்து சொல்லணும்!!!!???!!!!