பங்காளிங்க..

Wednesday, July 25, 2012

ஐ லவ் யூ டீச்சர்!!!!

இப்போ எல்லாம் வாத்தியாருங்க, வாத்தியாச்சிங்க, மாணவ, மாணவிங்க டாப்பிக்குதான் பேப்பர் முழுக்க வந்துகிட்டு இருக்கு..என்ன காரணம்? ஒரு காலத்துல அந்த டாக்டரு இப்படி ஆபரேசன் பண்ணி பேசண்டுங்க செத்து போயிட்டாங்க, இல்லேனா கை போச்சு, கால் போச்சு, கண்ணு போச்சு நு செய்தி வரும்...ஆனா இப்போ டீச்சர்ஸ் வருஷம் போலிருக்கு..

ஆசிரியர்களும்,  மாணவர்களும் -
 
எங்கே பார்த்தாலும் டீச்சருங்க பேரா அடிபட்டிருக்கு..நேத்து கூட ஒரு வாத்தியாரு ரவிக்குமர்னு  ஒருத்தரு 3 வயசு பையன்கிட்டே தகாத மாதிரி நடந்துகிட்டாரு னு செய்தி வந்திருக்கு..அதை பத்தி விசாரணை நடந்துகிட்டுதான் இருக்கு.. இதுக்கெல்லாம் என்ன காரணம்? ஏதாவது ஒரு படிப்பை படிக்க வேண்டியது..அப்புறமா எந்த வேலையும் கிடைக்கலைனா ஒரு தனியார் பள்ளியில வாத்தியாரு வேலைக்கு சேர வேண்டியது..கொஞ்ச நாள்ல அனுபவத்தை வாங்கிட்டு வெளிய வந்து இந்த மாதிரி ஆட்டம் போட வேண்டியது.. சில நாட்களுக்கு முன்னாடி வாத்தியாருங்க மாணவனுக்கு சிறுநீரை குடிக்கச் சொல்லி அதுல 3 பேரு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதா செய்தி வந்தது..நேற்று ஒரு செய்தியிலே ஒரு ஆசிரியை அடித்து மாணவி மயக்கம் னு வந்தது..நாமளும் அந்த மாணவப் பருவத்தை கடந்துதான் வந்தோம்னு ஏன் இவங்களுக்கு புரியமாட்டேன்குது..

அந்த காலத்து ஆசிரியர்கள்  -



அந்த காலத்துல நமக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி தட்டிக் கொடுத்து, வேலை வாங்கினாங்க... அவங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,  அவங்ககிட்டே பக்குவம் இருந்தது..அவங்களும் அடிச்சாங்க...அதுல அர்த்தம் இருந்தது..உண்மையான பாசம் இருந்தது..நானும் என்னோட கணக்கு வாத்தியார்கிட்டே நிறைய கொட்டு பட்டிருக்கேன்...ஆனா அவர் அன்னிக்கு கொடுத்த தண்டனை என்னை இன்னிக்கு ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு..வீட்டுலேயே பையனை நல்ல அடிச்சு வளருங்க னு பெற்றோர் கேட்டுக்கிடுவாங்க..

ஆசிரியர்கள் கையாலாகாத் திறன் 


பருவ வயது மாணவ, மாணவிகளை எப்படி கையாளனும்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சது...இப்போ குழந்தைகளை கூட எப்படி கையாளனும்னு ஆசிரியர்களுக்கு தெரியறது இல்லை...பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்வது தவறு என்றும், அவர்கள் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். அது தெரியாததால்தானே அவன் அல்லது அவள் மாணவர்களாகவே இருக்கின்றார்கள். அடித்தால்தான் புத்தி வரும் என்று சொல்லும் ஆசிரியர்களே...உங்களது பள்ளிப் பருவத்தில் நீங்கள் தவறுகளே செய்தது கிடையாதா? உங்களுக்கும் ஆசிரியர்கள் பொறுமையாய் பாடம் எடுக்கத்தானே செய்தார்கள்!!!

 பாலியல் புகார்களும் ஆசிரியர்களின் பங்கும் 

இப்போது காலம் மாறிவிட்டது...மாணவர்களின் தவறுகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறி விட்டது...ஆனால் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் ஆசிரியர்களை என்னவென்று சொல்வது? இப்படி தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அப்போதுதான் அடுத்தாற்போல் அந்த தவறுகள் நடைபெறாது. அவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் வாதாடக் கூடாது. மனித உரிமைகள் ஆணையம் அவர்களுக்கு ஜால்ரா அடிக்க கூடாது. ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்க கூடாது..


ஜால்ராக் கூட்டங்கள் -
 
ஆனால் உடனடியாக சாதி, மற்றும் சங்கங்கள் அரசியல் தலையீடுகள் இருப்பதால்தான் இம்மாதிரியான கேடு கேட்ட விஷயங்கள் அரங்கேறி வருகின்றது. தவறு செய்தார் என்று தகவல் வந்தால் உடனே அது நிருப்பிக்கப் பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் நடந்தேற வேண்டும். பணியிடை நீக்கம் பத்தாது. பணி நீக்கம் மற்றும் ஆசிரியப் பதவி, கல்வித் தகுதி என்று அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும். அப்போதுதான் அடுத்தது இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கலாம். 

வரும்காலத்தில்  பள்ளிக் கல்லூரி விளம்பரங்கள் -


போற  போக்கை பார்த்தா இனி எல்லா தனியார் பள்ளியிலும் பாலியல் கொடுமை இல்லாத பள்ளிக்கூடம் எங்களோடது என்று கூட விளம்பரம் செய்யவேண்டி இருக்குமோ என்ற அச்சம் நிலவுகின்றது. அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து வருகின்றது கல்வித்துறை..

ஆசிரியர்கள் பயோடேட்டா -

அதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களின் முழு விவரங்கள் கல்லூரிகளில், பள்ளிகளின் வரவேற்பறையில் வெளியிடப் படவேண்டும். அவர்களது வயது, கல்வித் தகுதி, மற்றும் அனுபவம் பற்றிய தகவல்கள் கொடுத்திருக்க படவேண்டும். அது நடக்கவில்லை என்றால் அவர்கள் தான்தோன்றித் தனமாக நடப்பார்கள். 

கல்வி நிறுவனங்களின் அணுகுமுறைகள் -


மாணவர்கள், மாணவிகள் தவறு செய்யும்போது அவர்கள் திருத்தப் பட வேண்டும்...இல்லை எனில் அந்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்க ப்பட வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவிகளை மற்ற பிள்ளைகளின் முன்பு அவமானப் படுத்துகின்றார்கள். அது பிள்ளைகளின் மனநிலையை வெகுவாக பாதிக்கும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். நாங்க ஸ்ட்ரிக்ட் ங்கோ நாங்க டெர்ரர் ங்கோ என்று சீன் காண்பிப் பார்கள். அது தவறு...மாணவனை தனியாய் அழைத்து எச்சரிக்க வேண்டும்..அதுவும் இல்லாவிட்டால் பெற்றோரை அழைத்து வரச் செய்து தண்டிக்க வேண்டும்.


தண்டனைகள் 

சரி இந்த கொடுமைகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகப்படியான தண்டனைகள் என்ன? சவுதியில் கொடுக்கும் தண்டனைகள் என்ன? அங்கே  மரண தண்டனை, இங்கே பெயில்  ஆர்டர்...

நன்றிகள் 


இதை எல்லாம் பார்க்கும் போது என்னை வாழ வைத்த என் இனிய ஆசிரியர்களே, உங்களுக்கு எனது மற்றும் என் குடும்பத்தின் சார்பாய் கோடானு கோடி நன்றிகள்..ஐ லவ் யூ டீச்சர்!!!!

5 comments:

  1. /// Mani Bharathi said...

    உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Com ///

    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
    எனது பதிவினை அழஹி.காமில் பதிவு செய்துவிட்டேன்...என் வலைப்பூவையும் இணைத்து விட்டேன்..

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன் முறையாக வருகிறேன். பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளன.

    இந்த பதிவில் நிறைய விஷயங்களோடு ஒத்துப்போனாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பக்கமும் சில தவறுகள் உள்ளன. உதாரணமாக பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்கள், அந்த செய்தி உண்மைதானா? அந்த ஆசிரியர் தன்னை குற்றமற்றவர் என்று நிருபித்தாரா என்ற செய்தியை மறந்து விடுகின்றன. ஒரு சில பெற்றோர் குழந்தை லேசாக கண்ணை கசக்கினாலே வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் குஷியாகும் குழந்தைகள், ஆசிரியரையே மிரட்டுகின்றன என்னத்தை சொல்ல?

    ReplyDelete
  3. இந்தக் கொடுமை எல்லா ஊர்களிலும் இருக்கிறது...
    வேதனைப் படும் விஷயம்...
    அந்தக் காலத்தில் (ஆசிரியர்களோ, ஆசிரியைகளோ) ஒரு சேவை மனப்பான்மையோடு செய்தார்கள்...
    இன்று அது ஒரு 'நல்ல' தொழில்.. இவர்களும் சரி... பள்ளி நிர்வாகமும் சரி...

    நன்றி...
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. இப்போ எல்லாமே வியாபார ரீதியாகத்தானே ஆகிவிட்டது. பள்ளிக்கூடங்கள் மாணவர்களிடம் இருந்து கறப்பதையே குறிகோளாக கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை வேலைககு வைக்கின்றன. இந்த லட்சணத்தில் எங்கே நல்லது நடக்கும். அன்று தவறு செய்த மாணவனை தண்டிக்கவும் தட்டி கேட்கவும் ஆசிரியருக்கு உரிமை இருந்தது. ஆனால் இன்றோ அது யாருக்குமே இல்லாமல் போய்விட்டது.

    ReplyDelete
  5. என்ன சொல்ல சகோ. முன்பு எல்லாம் ஆசிரியர் என்பவர்கள் கௌரவமாக கருதப்பட்டார்கள் ... ! மாணவர்களும் மரியாதைக் கொடுத்தனர். ..

    இப்போது எல்லாம் ஆசிரியர்கள் வக்கிரமான எண்ணமுடையோராக இருக்கின்றனர் ... வளர்ந்த மாணவர்கள் கூட ஆசிரியரோடு பழகும் போது ஆசிரியர் என்ற உறவைத் தாண்டி காதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள் ...

    நல்லொழுக்கம் நிறைந்தவர்கள் இப்போது ஆசிரியத் தொழிலுக்கு வருவது மிகவும் குறைவே ஆகும். நல்லாப் படிச்சவன் எல்லாம் ஐடி கம்பெனிக்கு போய்ட்றாங்க ... மிச்சமும் சொகச்சமும் ஆசிரியர் தொழிலுக்கு சொற்ப சம்பளத்துக்கு வருதுங்க ...

    இதுக் குறித்து கடந்த ஆண்டு பதிவு எழுதப் போய் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டேன் .... ஆசிரியர்கள் மாணவர்களோடு பேஸ்புக்கில் இணைவதையே வெளிநாடுகளில் தடை செய்துள்ளார்கள் .. பாலுறவில் ஈடுபட்டால் ethical issue ஆக்கப்பட்டு ஆசிரியர் தொழில் செய்யவும் தடை போடப்படுகின்றன ..

    ஆனால் இந்தியாவில் மார்க் போடுகின்றேன், ப்ராஜக்ட் செய்ய உதவுகிறேன் என்ற போர்வையில் படுக்கைக்கும் கூப்பிடும் ஆசிரியர்களும் பலர் உள்ளனர் .. இதப் பற்றி எவன் வெளியில் பேசறான் .. அப்படியே பேச ஆரம்பிச்சாலும் வாயடைத்துவிடுகின்றார்கள்.

    பிரிகேஜி முதல் பிஎச்டி வரை ஆசிரியர்கள் பலரால் மாணவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது இந்தியாவில் மிக அதிகமாக நடந்துவருகின்றது.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...