பங்காளிங்க..

Monday, January 27, 2014

வீரமணி யின் ஓவர் ஆக்ட், சொதப்பலில் முடிந்த கலைஞரின் நாடகம்???

தேர்தலில் யார் யாரோடு கூட்டணி?  திமுக காங்கிரசில் இருந்து விலகிய பிறகு தேமுதிக வோடு கூட்டணி அமைக்க கலைஞரே ஆசைப்படுகின்றாராம்...அதாவது குடிகாரன் என்று கடந்த தேர்தலில் விமர்சித்த விசயகாந்தோடு கூட்டணியாம்....

கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் வடிவேலுவை பயன்படுதித்தி விசயகாந்தை கேவலப்படுத்தாத மேடை இல்லை என்று சொல்லலாம்...அந்த அளவிற்க்கு கேவலப்படுத்தி பேசிய போது கை தட்டி ஆராவாரம் செய்தவர்கள் ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி என்று எல்லோருமே தான்...

இன்று நாடாளுமன்றத் தேர்தலில் பதவி மோகத்திற்காக யாருடைய காலிலும் விழத் தயாராக இருப்பது திமுகவின் முதல் கட்டத் தோல்வியை காட்டுகின்றது....மதுரையில் யாருக்கு பதவி என்ற போட்டியை விட யாருக்கு எந்த சுவர் (விளம்பரம் செய்ய) என்ற பிரச்சினை ஸ்டாலின் மற்றும் அழகிரி தொண்டர்களுக்கு உருவாகிற்று...

எப்போதுமே கலைஞரின் காலடியிலே இருக்கும் ஸ்டாலின் கலைஞரின் நன்மதிப்பை பெற்று விட்டார் போலும்...அதனாலோ என்னவோ அழகிரி தரப்பு நியாயங்கள் கலைஞரின் செவிகளுக்கு சென்று விடவில்லை....விளைவு கருத்துப்போர், தற்போது இடைநீக்கம் வரை சென்றுள்ளது.... 

ஆனால் தீர்ப்பு என்னவோ ஒரு தலைப் பட்சமாக இருப்பது போல் தோன்றுகின்றது...பதவிக்காக தொண்டர்களைத்தான் கழட்டி விடும் அரசியல் சாணக்கியர் இன்று சொந்த மகனையே இடை நீக்கம் செய்துள்ளார்...(அல்லது செய்யப்பட தூண்டப்பட்டுள்ளார்) 

நாடகமா ? நிஜமா? பட்டிமன்றத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி!

தேமுதிக வோடு கூட்டு சேரக் கூடாது என்பது அழகிரியின் தனிப்பட்ட எண்ணம்...கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்று சொல்லி முடித்திருக்கலாம்...ஆனால் அதையும் தாண்டி அழகிரி ஆதரவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியத்தை தருகின்றது...

எல்லாவற்றையும் தாண்டி அழகிரியின் இடை நீக்கத்‌திற்க்கு திமுக அமைச்சர்களோ அல்லது வேறு எவருமே ஆதரவு தெரிவிக்காத நிலையில் வீரமணி வாழ்த்து தெரிவித்திருப்பது எல்லோருக்குமே இதுவுமே ஒரு நாடகமோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது....வீரமணி கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்துவிட்டாரோ என்ற எண்ணமும் தோன்றுகின்றது...

இதன் மூலம் கலைஞர் குடும்ப அரசியல் செய்கின்றார் என்ற கறை அழிந்துவிட்டதாக சொல்கின்றார் வீரமணி????  தலைவர் வீரமணி அவர்களே....கலைஞரின் குடும்பம் என்பது வெறும் அழகிரி அவர்களோடு முடிந்து விட்டதா? அப்படி என்றால் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி என்பவாகள் எல்லோரும் வேறு குடும்பத்தை சார்ந்தவர்களா, என்னதான் சொல்ல வர்றீங்க...

உண்மையில் இது இடை நீக்கம்தானா? 

நிச்சயம் விசயகாந்துக்கு இது ஒரு நல்ல பாடம்....பதவிக்காக சொந்த மகனையே இடை நீக்கம் செய்தவர், நாளை விசயகாந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது வெட்ட வெளிச்ச்சமாகி விட்டது 

11 comments:

  1. Veeramani is also kalaignar's family organization, u know? Thiravida kalagam is fore party of thiravida munnetra kalagam.

    ReplyDelete
  2. அழகிரியும் அவர் குடும்பத்தினரும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்பது வெளிப்படையான உண்மை. தான் மதிக்கும் ஒரு பகுத்தறிவுவாதியின் புதல்வரே தன்னை ஆத்திகராகக் காட்டிக்கொள்வது வீரமணிக்கு எவ்வளவு பெரிய அவமானம்.

    இனிமேல் அழகிரியின் கடவுள் நம்பிக்கைகள் பற்றி நிறையப் விமர்சிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    கே. கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. வெளியே போனாலும் விடமாட்டாரு னு சொல்றீங்களா? இதை நீங்களும் நம்புறீங்களா?

      Delete
    2. அதாவது, அழகிரியைக் காப்பாத்த இப்போது அவர் நம்பின எந்தக் கடவுள் வருவார் என்று பார்க்கலாம் என்று வீரமணி சொல்லத் தொடங்குவார் என்பது எனது கணிப்ப்பு.

      கே. கோபாலன்

      Delete
  3. அது இடைநீக்கம்தானே . கொஞ்சநாள் கழிச்சு கண்கள் பணித்தது இதயம் இனித்தது அப்புடின்னு சொல்லி கட்சில சேர்த்துக்குவாரு நம்ம கட்டுமரம் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்று தினகரன் கருத்துக் கணிப்பு வெளியிட்ட பிறகு அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தது...அதன் பின்னர்தான் அழகிரி யின் அறுபதாம் கல்யாணத்தில் கலைஞருக்கு கண்கள் பணித்து இதயம் குளிர்ந்தது...தற்போது மீண்டும் பிறந்த நாள்...இப்போது என்ன நடக்கப் போகின்றது????

      Delete
  4. உண்மையில் விஜயகாந்த்தின் நிலைதான் பரிதாபம். கடைசியில் அனாதையாகப் போய்விடுவாரோ என்று கவலையாக இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் மாதிரி ஆகவேண்டியவர், டி.ராஜேந்தர் மாதிரி ஆகிவிடக்கூடாது!

    ReplyDelete
    Replies
    1. இதுல விசயகாந்துக்கு எந்த பிரச்சினையும் இல்லேன்னு நான் நினைக்கிறேன்....விசயகாந்தால குடும்பத்துல குழப்பம் வந்திருக்கு...அதை எப்படி சரி செய்யப்போறாங்கன்னு பொறுத்திருந்து தான் பாக்கணும்.,..

      Delete
  5. Already Ratharavi, Vaiko, Dayanithi, now azhagiri, next it may be kanimozhi (already kanimozhi name missing in all welcome banners in DMK) ? something interesting! i think good timepass for the media

    ReplyDelete
  6. BLOOD IS THICKER THAN WATER....!Karunanithi is getting older day by day......he desperately needs powerful portfolio in future central ministry to protect business empire of maran bros.....which is going be tough competitor of ambani bros.......azhagiri drama is part of his entertaining agenda which is targetting UDANPIRAPPUS.....nothing more!!

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...