பங்காளிங்க..

Wednesday, March 12, 2014

காலுக்கு கீழே கிடக்குது, நம்ம மருத்துவம்!!!!



இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், மருந்து என்பது பெரிய வியாபாரமாகி விட்டது....காசுதான் உலகம்...இல்லை, இல்லை பணம்தான் பிரதானாம் என்று ஆகி விட்டது...

என்ன ஆச்சு? காலையிலே இருந்து பயங்கரமான தலைவலி? அப்படியா? உடனே ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திடுவோம், நான் சொல்ற இடத்துல தான் ஸ்கேன் பண்ணனும்...அப்போதான் ஸ்கேன் ரிப்போர்ட் தெளிவா இருக்கும்...

காலை ஏன் நொண்டி நொண்டி நடக்குறீங்க? ரொம்ப நேரம் நிக்க முடியலை, உட்கார முடியலை...மூட்டு உளைச்சல் ஜாஸ்தியா இருக்கு?

அப்படியா? கீழேயே நம்ம லேப் இருக்கு, எக்ஸ்-ரே எடுத்திடலாம்...நீங்க நடக்க வேண்டாம்...லிப்ட்ல போங்க...1500 ரூவாய மட்டும் ரிசப்சன் ல கட்டிடுடுங்க...

ரிப்போர்ட் டை பார்த்திட்டு அப்பால சர்ஜரியா? இல்லேனா என்னான்னு பார்த்திடலாம்...

எதுகெடுத்தாலும் லேப் தானா? அந்த காலத்துல லேப் வசதி இல்லாமலே நோயாளிகளை பார்த்தாங்களே...எங்க பாட்டிக்கு வயசு 90 ஆகுது...இன்னமும் அவங்க வைத்தியம்தான் பாக்குறாங்க....ஆனா அதிகப்படியா 30 ரூவாய்க்கு மேல பீஸ் கொடுத்ததே இல்லையே...

உண்மையை சொல்லனும்னா, இன்றைய மருத்துவம் எல்லாம் நம்ம காலுக்கு அடியில்தான் இருக்கு!

உங்கள் பாதம்தான் உங்களுடைய பெரும்பாலான நோய்களுக்கு தற்காலிக, நிரந்தர மருந்து!

கீழே இருக்கிற படத்தை பாருங்க, மேல இருக்கிற படம் சும்மா அழகுக்கு தான்...

  


இதுல என்ன, ஒண்ணுமே புரியலை நு யோசிக்கிறீங்களா...படத்துல போட்டிருக்கிற இடத்துல லேசா இதமா தேச்சு விட்டா அந்தந்த இடத்துல இருக்கிற வலி பறந்து போகும்...நான் அடிக்கடி இந்த மாதிரி செஞ்சிக்குவேன்...நல்ல பலன் இருக்கு....ஏன்னா, நம்ம உடம்புல இருக்கிற ஒவ்வொரு பகுதியும் மற்றொரு பகுதியோடு இணைஞ்சிருக்கு! 

1 comment:

  1. என்ன தீடீருனு மருத்துவத்துல இறங்கிட்டீங்க

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...