பங்காளிங்க..

Wednesday, April 23, 2014

கலைஞரின் கடைசி ஆயுதம்...


இதுதான் எனது கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞரை நம்பி நாம் ஓட்டு போட்டு விட்டால் அடுத்த வருடம் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக காலையில் இருந்து மதியம் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள்....அய்யா கலைஞர் அவர்களே, தமிழுக்காகவும், தமிழ்  மக்களுக்காகவும் நீங்கள் உழைத்தது, இதுவரை நீங்கள் உழைத்ததற்கு நாங்கள் அனுபவித்த இன்பங்களே போதும் என்று எண்ணுகின்றோம்......

அவருக்கு கடைசி தேர்தலில் சற்று ஓய்வு கொடுப்போமே....

கட்சிக்குள் உட்பூசல் இருக்கலாம், ஆனால் கட்சியே உட்பூசலில் நிற்கின்றது...
தேர்தல் நேரத்தில் செல்வகணபதி எம் பி மீது சுடுகாட்டு கூரை ஊழல் என்று வெளிவந்திருக்கின்றது...இதையும் தாண்டி அந்த கட்சிக்கு நாம் வாக்களிப்பது வெட்க கேடானது...

திமுக மீது கோபம் என்றால் அதிமுக விற்கு வாக்களிக்கின்றோம்...அதிமுக மீது கோபம் என்றால் திமுக விற்கு வாக்களிக்கின்றோம்...ஏன் வேறு கட்சிகளே இல்லையா?

மாறுபட்ட கட்சியினை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு கட்சிகளுக்கு ஒரு மாற்றினை நாம் கொண்டு வர வேண்டும்...

திமுக ஒவ்வொரு பிரச்சாரத்திலும் நாங்கள் எவ்வளவோ செய்தோம்...அதிமுக என்ன செய்தது என்று கேட்கின்றது....

எவ்வளவோ ஊழல் அல்லது வன்முறை என்று சொல்கின்றார்களா? அல்லது என்ன சொல்ல வருகின்றார்கள் என்று தெரியவில்லை....

கலைஞரால் தனது சொந்த மகனையே சமாதானப் படுத்த முடியவில்லை...அப்புறம் எப்படி மத்திய அரசை சமாதானப் படுத்தும்?

2ஜி ஊழல் வழக்கில் திகார் சென்று வந்ததை மிகப் பெரிய தியாகமாக நினைத்து மீண்டும் ஆ.ராசாவை நீலகிரியில் நிறுத்துகின்றார்கள்....

ஒவ்வொரு சேனலும் போட்டிப் போட்டுக் கொண்டு தனது சொந்த கட்சிக்கு இருக்கும் கூட்டத்தை காண்பித்து பிரமாண்டம், பிரமாண்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது...மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுரை, பேருரை என்று வசனம் பட்டையை கிளப்புகின்றது...

உண்மையில் மக்களே...அந்தந்த தொகுதி கவுன்சிலர்கள், மந்திரிகள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு 200 ரூவாயும், குவாட்டரும், பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்படுகின்றார்கள்....நான் ஏன் இதை உறுதியாக சொல்கின்றேன் என்றால் எங்களையும் அழைத்தார்கள்...இப்போ தலைவரு வந்திடுவாரு...ஒரு அரை மணி நேரம் வந்து நில்லுங்க....அப்புறமா மேடைக்கு அந்த பக்கம் ரூவாய் தருவாங்க என்று சொல்லியே அழைத்தார்கள்....

இப்படித்தான் அந்த கூட்டம் என்பது புரிந்தது....இப்படித்தான் எல்லா கட்சிகளுமே செய்கின்றது...அதையே படமாக்கி மக்களை குழப்புகின்றார்கள்...

இந்த அம்மையார் 4000 கோடி ரூவாய் எப்படி சேர்த்தார் என்று கலைஞர் விளக்கம் சொல்கின்றார்..... அதெல்லாம் இருக்கட்டும், நீங்கள் எப்புடி இம்புட்டு கோடி ரூவாய் சம்பாதிச்சீங்க...என்று அதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே...அந்த அம்மையார் 4000 கோடி ரூவாய் சம்பாதித்தார் என்று சொல்லும்போது உங்களுக்கு மனசாட்சி உறுத்த வில்லையா? மிஸ்டர்.பார்த்த சாரதி என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது...

மதவாதத்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று சொல்லும் கலைஞர் ஒரு வெற்று பத்திரத்தில் மக்கள் முன்னிலையில் நாளை எந்த ஒரு சூழ்நிலையிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சொல்ல முடியுமா?

இந்துத்துவா வை இவ்வளவு கேவலமாக விமர்சிக்கும் கலைஞரின் மகன் ஸ்டாலின் ராகு காலம் முடிந்த பிறகுதான் பிரச்சாரத்தை துவங்கினார் என்பது பத்திரிகையில் வந்த செய்தி....

ராஜாத்தி அம்மாளும், தயாளு அம்மாளும், துர்கா அம்மாவும் இன்று வரை இந்து கோவில்களில் பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை...

மதவாதம் இல்லாத கட்சி அந்த கொள்கையை உடைய கட்சி என்று சொல்லும் கலைஞர் இசுலாமிய அமைப்புடனும், கிறித்துவ அமைப்புடனும் கை கோர்த்து நிற்பது வேடிக்கையாய் இருக்கின்றது.....

அவரால் எனக்கு இந்துக்களே தேவையில்லை என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா? இவரின் திரைக்கதைக்கும், வெட்டி கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் மட்டும் இந்துத்துவா தேவை...ஆனால் வேறு மதத்தை பார்த்து விட்டால் இந்துத்துவா ஏளனமாக தெரிகின்றது.....

நீங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அன்றாடம் செத்து மடியும் எம் தமிழ் மீனவனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

கடுமையான மின்வெட்டிற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

கட்சத்  தீவினை காவு கொடுத்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

கூடங்குளம் மக்கள் போராட்டம் தொடங்கிய போது நீங்கள் எங்கே சென்றீர்கள்?

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், கேஸ் விலை ஏறிய போது நீங்கள் எங்கே போனீர்கள்?

ஈழத் தமிழன் செத்து மடிந்த போதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்....

கூட்டணியை விட்டும் விலக வில்லை...அதுவே கனிமொழியை கைது செய்த போது என்ன செய்தீர்கள்? 

இப்போது செல்வகணபதியை கைது செய்த போது என்ன செய்கின்றீர்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது...செல்வகணபதி ஊழல் செய்தார் என்பது உண்மைதானா?

ஏன் உங்கள் பொன்னான வாக்குகளை வீணடிக்க வேண்டும்...இருக்கும் மற்ற நபர்களுக்கு , உங்கள் ஊர் சுயேச்சை க்கு வாக்களியுங்கள்.....அவர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க கூடாது? மக்கள்தான் சிந்திக்க வேண்டும்...

16 comments:

  1. உங்கள் ஊர் சுயேச்சை க்கு வாக்களியுங்கள்.....அவர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க கூடாது? மக்கள்தான் சிந்திக்க வேண்டும்..
    >>
    ஜெயித்ததும் அவர் ஆட்சி அமைக்கும் கட்சியில் சேர்ந்து அவரும் மாறிப்போக மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்!?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், இருக்கவே இருக்கு "நோட்டா", நம்பிக்கையுடன் வாக்களிப்போம்...நோட்டா வாவது தமிழகத்தை காக்கட்டும்...

      Delete
  2. வணக்கம்
    காலந்தான் பதில் சொல்ல வேண்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. காலம் முடிந்து விட்டது...கடமை வந்து விட்டது...

      Delete
  3. better to vote DMK . they are better than ADMK

    ReplyDelete
    Replies
    1. திமுக மீது கோபம் என்றால் அதிமுக விற்கு வாக்களிக்கின்றோம்...அதிமுக மீது கோபம் என்றால் திமுக விற்கு வாக்களிக்கின்றோம்...ஏன் வேறு கட்சிகளே இல்லையா?

      Delete
  4. தமிழ்(எல்லா மதமும்) சமுதாயத்தின் துரோகி திமுக & காங்கிரஸ்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....நெஞ்சம் பதைபதைக்கத் தான் செய்கின்றது...

      Delete
  5. bjp supporters suddenly started shownig karisanam on tamil society... aiyo aiyoo

    ReplyDelete
    Replies
    1. நிதர்சனமான உண்மை....ஆனால் கரிசனம் காட்டுவதை விட கரிசனம் காட்டுவது போல் இன்றும் சிலர் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எப்போதுதான் ஒரு சில மக்களுக்கு புரியப் போகின்றதோ...

      Delete
  6. Replies
    1. உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுப்பா...

      Delete
  7. //டுமையான மின்வெட்டிற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

    கட்சத் தீவினை காவு கொடுத்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

    சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

    கூடங்குளம் மக்கள் போராட்டம் தொடங்கிய போது நீங்கள் எங்கே சென்றீர்கள்?

    ஒவ்வொரு நாளும் பெட்ரோல், கேஸ் விலை ஏறிய போது நீங்கள் எங்கே போனீர்கள்?

    ஈழத் தமிழன் செத்து மடிந்த போதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்....

    கூட்டணியை விட்டும் விலக வில்லை...அதுவே கனிமொழியை கைது செய்த போது என்ன செய்தீர்கள்? //
    ஏம்ப்பா நீ "மானாட மயிலாட" ல்லாம் பாக்குறதில்லையா?
    நல்லா கேக்குறான் டீடெய்லு

    ReplyDelete
    Replies
    1. நீயா, நானா வோடு நிப்பாடிக்கிடுவேன்...வேற எதுவும் பாக்குறது கிடையாது...

      Delete
  8. //அவருக்கு கடைசி தேர்தலில் சற்று ஓய்வு கொடுப்போமே....//
    தயவு செய்து கொடுத்துவிடுங்கள்.

    ReplyDelete
  9. தமிழகத்துல உள்ளதிலேயே மிகக் கேவலமான அரசியல்வாதின்னா அது இவன்தான்.......

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...