பங்காளிங்க..

Sunday, June 29, 2014

திமுக வளர்கின்றதா? தேய்கின்றதா? நடுவர் மஞ்சப்பை

திமுக நடத்தும் மீட்டிங் என்றாலே வரிந்து கட்டி கொண்டு தலைவரின் பேச்சை கேட்க முதல் வரிசையில் நின்ற காலம் அது....எதுகை மோனை என்ன, எடுத்துக்காட்டுகள் என்ன, என்ன? எங்கே போனது அந்த உதாரணங்கள்....எனக்கு நினைவு தெரிந்து நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது, கல்லூரி படிக்கும் போதும் கனிமொழி யாரென்றே எனக்குத் தெரியாது...ஆனால் தற்போது வாரிசுகளின் ஆட்டம் அதிகம்,

அதனால் தற்போது அவரது பேச்சினை கேட்க யாருமே முன் வராதது ஆச்சரியமான விஷயம்...

காரணம் என்ன?   

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் முடித்து விட்டு வீடு திரும்பிய கலைஞரும், ஸ்டாலினும் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி என்ன? 

மக்கள் மிகுந்த எழுச்சியோடு இருக்கின்றார்கள்....இந்த அம்மாவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது....இந்த அம்மாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகின்றார்கள்....ஆனால் முடிவுகள் எக்குத்தப்பாய் முடிந்தது. இப்போது களை  எடுக்க தொடங்கி இருக்கின்றார்கள்....

ஆடத் தெரியாதவள்  தெரு கோணல் என்று சொன்னாளாம்...அந்த கதையில் தான் இருக்கின்றது..திமுக தலைவரின் இந்த பேட்டிகள்.....

பல வருடங்களாய் திமுக விற்கு உழைத்த தொண்டனுக்கு கடைசி வரை குவாட்டர் பாட்டிலும், பிரியாணி பொட்டலமும் மட்டுமே...கட்சி என்றால் என்ன,? என்று தெரியாத, கட்சி வரலாறு தெரியாத மக்கள் இன்று நாடாளுமன்ற வேட்பாளர்கள்.....கட்சி தேர்தல் நிதி வழங்கி விட்டால் அவர்களுக்கு தேர்தலில் சீட், மற்றவர்களுக்கு குல்லா என்றால் யாரால்தான் ஜீரணிக்க முடியும்....

என்ன காரணம் என்று கட்சி மேலிடதிர்க்கே வெளிச்சம்...

அதிமுக ஒரு பெண்ணின் தலைமையில் நடக்கின்றது.....ஆனால் இன்று வரை கட்சி கோட்பாட்டிற்கு உட்பட்டு, கட்சியை ஒரு தலைமையின் கீழ் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...என்பதை கலைஞர் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்....அவரிடமும் சில குறைகள் இருக்கலாம்...ஆனால் ஒரு பெண் அகில இந்திய கட்சியின் தலைமையில் இருப்பதை, கட்டுகோப்பாய் கட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல.....அந்த தைரியம் பாராட்டப் படக்கூடியதே....

திமுக வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வர முடியாது....உண்மைதான்...வெளியில் இருந்து யாரும் வர முடியாது..உள்ளேயே இருக்கின்றார்கள்....

அடிக்கடி அண்ணாதுரையின் வசனங்களை நினைவுபடுத்தும் கலைஞருக்கு நாங்கள் ஒன்றை நினைவுபடுத்துகின்றோம்...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மட்டும் அண்ணா சொல்லவில்லை....குடும்ப உறுப்பினர்களுக்கு, வாரிசுகளுக்கு அரசியலில் இடமில்லை என்றும் அதே அண்ணா தான் சொன்னார்....

அது போலவே தனது தொண்டர்களை ஊக்குவித்து தான் கலைஞர் கருணாநிதி என்ற தொண்டனை தேர்ந்தெடுத்தார்....அவரது சொந்தக்கார மகனையோ, அல்லது உறவினரையோ கட்சிக்குள் சேர்க்க வில்லை...

திமுக அழிந்து விடாதா, பூண்டோடு உருத்தெரியாமல் போய் விடாதா என்று ஒரு சிலர் நினைக்கின்றார்கள் என்று சொல்லி இருக்கின்றார்.
மன்னிக்க வேண்டும் தலைவரே, நாங்கள் அதை பற்றி நினைப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. நீங்களாகவே அப்படி சொல்லிக் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.....

ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கணக்கினில்  தான் திமுக தலைமை நடந்து கொள்கின்றது என்று தலைவரின் மூத்த மகனே பேட்டி அளிக்கின்றார்.....ஸ்டாலினால் தான் திமுக தோல்வி அடைந்தது என்று அழகிரி பேட்டி கொடுக்க....உடனே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. ஏன் அழகிரி பக்கம் இருக்கும் நியாயம் விளக்கம் கேட்கப் படவில்லை என்பதே அழகிரி ஆதரவாளர்களின் கேள்வி...உண்மைதானே, அப்படி என்றால் சாவி கொடுத்த பொம்மையாகி விட்டாரோ கலைஞர் என்ற சந்தேகம் வரத்தானே செய்யும்....

அனைவரையும் களை எடுக்கின்றோம் என்ற பெயரில் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் தற்போது நீக்கி கொண்டு வருகின்றார்கள்....

குடும்ப அரசியலில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருக்கின்றது....அதை ஏற்றுக் கொண்டால், கவனித்துக் கொண்டால் திமுகவின் வளர்ச்சி அபாரமாய் இருக்கும்...இல்லை எனில் வாரிசு சண்டையும் ஓயாது...திமுக வின் வளர்ச்சியும் தேயத் தொடங்கி விடும்....இதை நாங்கள் சொல்லவில்லை...அரசியல் வல்லுனர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள்....

1 comment:

  1. வலைசரத்தில் தங்களை பற்றி ...

    விவரத்திற்கு :

    பதிவர்களும் சமூகமும்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...