பங்காளிங்க..

Wednesday, April 18, 2018

3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......

 இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உரிய பதிவு. அந்த சானலுக்கு அந்த ப்ரோகிராமுக்கு தடை சொல்லுங்கள். ஏதாவது ஒரு ஊடகம் துணிவிருந்தால் ஸ்டெர்லைட் ஆலையின் விபரீதங்களை சொல்லுங்கள், காவிரி பிரச்சினையின்  கண்றாவிகளை சொல்லுங்கள், மரம் வளர்க்க சொல்லிகொடுங்கள், தண்ணீர் சேகரிக்க சொல்லிக்கொடுங்கள், தான தர்மம் வழங்க சொல்லிக்கொடுங்கள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வினை பற்றி சொல்லிக்கொடுங்கள், தயவு செய்து மாமா வேலை பார்க்காதீர்கள், 

தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது, எவன் நாசமாக போனால் நமக்கென்ன என்று பெண்களை கொச்சை படுத்தும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் ஊடுருவி கொண்டிருக்கிறது, கல்லூரி பேராசிரியையின் காமலீலைகள், வாட்சப் பில் பரவலாகி கொண்டிருக்கிறது, அது ஒரு பக்கம் எனில், கேவலமான கான்செப்ட்டை ஸ்க்ரிப்ட் தயார் செய்து பெண்களை போகப் பொருளாக மாற்றி ஒரு அண்ணிடம் அடகு வைக்கும் அப்பா, அம்மாக்கள், ஒரு ஆணுக்கு அலையும் பெண்ணாக பெண்ணை கேவலப்படுத்தியிருப்பதும், அதற்கு பொது மக்களிடம் கருத்து கேட்பதும் மிகவும் கேவலமான செயலே, தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்கே போயிக் கொண்டிருக்கிறது,? 

மகளிர் ஆணையமும் தூங்கி கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகின்றது,  இதை ஒரு பொழுது போக்காக பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள், உங்க வீட்டு பெண்ணை ஆர்யா கூட அனுப்பி வைப்பீங்களா?
அந்த கேடுகெட்ட சுயம்வரத்தில் பங்கு கொள்ளும் அந்த பெண்ணை தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையின் பார்வை எப்படி இருக்கும்? 

குடும்பமே சேர்ந்து கொண்டாட இது என்ன பிறந்தநாள் விழாவா? கலாச்சார சீர்கேட்டின் உச்ச கட்டம், இதை சொன்னதும், ஒருவர் என்னிடம் உங்களுக்கு பொறாமை வயித்தெரிச்சல் என்று சொன்னார், அதே நபரிடம் திருப்பி கேட்டேன், நாளை உங்கள் பொண்ணை இதே மாதிரி ஒரு பிரபலத்திற்கு ஜோடியாக அனுப்பி வைப்பீர்களா என்று, கல்லூரி பெண்களும், பள்ளி மாணவிகளும், இதைத்தான் விரும்பி பார்க்க வைத்துள்ளது, இந்த சமுதாயம், 

கேட்டால் பெண்ணின் சுதந்திரத்தை கட்டுபடுத்தாதே என்று எகத்தாளம் வேறு, இதுவா பெண்ணின் சுதந்திரம், பெண் சாதிக்க பிறந்தவள், சாக்கடை அல்ல, எல்லா பன்னிகளும் உருண்டு மேய்ந்து செல்ல, பெண் அமைதியானவள் என்று சொல்ல காரணம் தென்றலை போன்றவள், அவள் புயலாகவும் மாறுவாள் என்பதற்காக!  

எதிர்காலத்தில் இந்த சமுதாயம் எப்படி மாறிப்போகும்? எந்தளவிற்கு தரம் தாழ்ந்து போகும், பொருளாதார சூழ்நிலைகள் சரியில்லையே, ஒரு நடுத்தர, ஏழை குடும்பங்களை சார்ந்த பெண்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எந்த எதிர்விளைவுகளையும் பற்றி சிந்திக்காத ஒரு தொலைகாட்சி ஊடகம்

ஏதாவது ஒரு ஊடகம் சாதித்த பெண்மணிகள் என்று ப்ரோக்ராம் எடுத்து வெளியிட்டுள்ளதா? சமுதாயத்தில் அவர்கள் பட்ட வேதனைகளை எடுத்து சொல்லுகிறதா? அதை விட்டுட்டு தேவையில்லாத ஆசைகளை வன்மங்களை தூண்டி பெண்களை கில்லுக்கீரையாக்கி இருக்கிறது, ஆர்யாவுக்கு வேண்டுமென்றால் இது டைம் பாசாக இருக்கலாம், ஆனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றான், நாளை எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம் என்றும் கூட ஒளிபரப்பு செய்யும், அதையும் வேடிக்கை பார்க்கும், பொது மக்களிடம் கருத்தும் கேட்டு அவர்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள், ஆனால் அவமானப்படுவது யார்?   

ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி ஒரு மாவட்டமே போராடி கொண்டிருக்கிறது, மறு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் வைக்க கோரி தமிழ்நாடே பற்றி எரிகிறது,

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத ஒரு ஊடகம் மாமா வேலை பார்த்து கொண்டிருக்கிறது, பெண்ணை இன்னும் போக பொருளாக அடிமைப்படுத்த நினைக்கிறது ஒரு கும்பல்,

எவ்வளவு வக்கிரமான, கீழ்த்தரமான ஒரு செயல், ஒரு ஆணை தேடி முப்பது பெண்கள் திருமணத்திற்கு அலைவது போல ஒரு ப்ரோக்ராம், அதில் நாயகனாக வரும் ஆர்யா அங்கே பங்கு பெரும் ஒவ்வொரு பெண்ணுடனும் டான்ஸ் ஆடுகிறார், மருதாணி போடுகிறார், அவர்களோடு சேர்ந்து கூத்தடிக்கின்றார்,

நாட்டு பிரச்சனைகளை மறைக்க இந்த மாதிரியான செயற்கைகளை உருவாக்கி பேட்டிஎடுக்கிரார்கள், மானங்கெட்ட தமிழர்களே (இந்த கலாச்சார சீரழிவிற்கு ஆதரவாக பேட்டி கொடுப்பவர்களைத்தான் ) சொல்கின்றேன்,

உங்கள் வீட்டு பெண் இப்படி ஒரே ஆணோடு சுயம்வரம் செய்ய ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியெனில் இதற்கு ஆதரவு கொடுங்கள், கலர்ஸ் தமிழ் என்றொரு சானல், ஆர்யா மற்றும் 3 பெண்களை தேர்ந்தெடுக்கின்றாராம், இதுவா பெருமை, போதும் பெண்களை இழிவுபடுத்தும் கீழ்த்தரமான செயல், நிறுத்துங்கள்,

ஒரு எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு இந்தியாவே பற்றி எரிகிறது, ஆனால் எதை பற்றியும் கண்டுகொள்ளாத ஒரு அரசாங்கம்,

ஆசிபா விற்கு ஆதரவு கொடுப்பதும் இதே இளைஞர்கள்தான், இந்த மாதிரியான அலங்கோலங்களுக்கு ஆதரவு கொடுப்பதும் நீங்கள்தானா? அப்படியெனில் ஆசிபா விற்கு கொடுக்கும் ஆதரவு போலியானதா? 

விளம்பர இடைவேளைக்கு பிறகு கலர்ஸ் தமிழ் வழங்கும் முதலிரவு தொடரும், இப்படியும் நாளை போடுவார்கள், சினிமா கதாபாத்திரங்களில் கடவுளின் பெயரில் ஒருத்தி தாசி வேடத்தில் வருகிறாள் என்பதற்காக தியேட்டரையே அடித்து நொறுக்கியவர்கள் தமிழர்கள், இன்று அடுத்தவரின் அந்தரங்கங்களை படம் எடுத்து காசு பார்க்கும் கூட்டத்திற்கு கரகோஷம் வேறா? 

மானமுள்ள தமிழர்கள், உடனடியாக இந்த நிகழ்ச்சியை நிறுத்துங்கள், பெண் பிள்ளைகளின் நெஞ்சங்களில் நஞ்சினை விதைக்காதீர்கள், அவளுக்குள் தேவையற்ற கற்பனைகளை வளர்த்து அவளது எதிர்பார்ப்புகளை கொச்சைபடுத்தாதீர்கள், பாரத் மாதா கி "ச்சே" பெண் வழக்கறிஞர்களே, இந்த நிகழ்ச்சி உங்களை காயப்படுத்தவில்லையா? இழிவுபடுத்தவில்லையா? 

Saturday, April 14, 2018

வாட்டாள் நாகராஜனுக்கு பகிரங்க சவால்!


 தமிழ் நாட்டில் மட்டுமே இந்த கேவல கூத்துக்கள் அரங்கேறும் என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் ஒரு சான்று,
இது எப்படி இருக்கிறது தெரியுமா? சில கிராம வழக்குகளில் பெண்ணை கெடுத்தவரே அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று வழங்கும் தீர்ப்பை போல இருக்கிறது, 

அதாவது திமுக ஆட்சியில் இருக்கும் போது காவிரி நதி நீர் பற்றி அந்த பிரச்சினைகள் வரும்போது வாயே திறக்க மாட்டார்கள், எதிர் கட்சியாக இருக்கும் அதிமுக வும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று ஆடுவார்கள், ஆனால் ஒருவருமே இந்த அம்பது ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஆணியும் புடுங்கலை, இந்த உதவாக்கரை கூட்டணி கட்சிகள், உதிரி கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?  

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களுடைய கட்சியை காப்பாற்ற இந்த இரண்டு ஜாம்பவான் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ஓட்டு போட்டுவிட்டு திருப்பி ஒரு கோரிக்கையை வைப்பார்கள், கோரிக்கை என்பது நாட்டிற்காக இருக்காது, கட்சி வளர்ச்சி அல்லது தொகுதிக்குள் போயிட்டு வருவதற்கு) கொஞ்சம் செலவுக்கு காசு என்று கேட்பார்கள், கேட்டது கிடைக்காவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்கின்றோம் என்று மக்களை கூமுட்டை ஆக்கிவிட்டு சட்டசபையில் எதிர்வரிசையில் சென்று உக்காந்து கொண்டு இந்த ஆட்சியை கலையுங்கள், சட்ட ஒழுங்கு சரியில்லை, சட்டை பொத்தான் சரியில்லை என்று லூசுத்தனமாக கூவிக்கொண்டிருப்பார்கள், 

எவனாவது ஒருத்தன், ஒரு கட்சித் தலைவன் இந்த விஷயத்தை மாற்றி அமைச்சிருக்கானா பாருங்க, இந்த வைகோ இருக்காரு பாருங்க, அவர் நிதானமா நடந்து போறாரா, இல்லேன்னா, டாக்டர் தினமும் பத்து கிலோமீட்டர் நடந்து போங்கன்னு சொன்னதுக்கு நடக்குறாரான்னு தெரியலை, அவர் எதுக்கு நடக்குராரான்னு தெரியாமலே சில கூமுட்டைங்க அவர் பின்னாடி நடப்பானுங்க, ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க மாட்டாரு, முடியாதுன்னு சொன்னாரு, அப்புறம் ஸ்டாலின் என்னோட தம்பின்னு சொல்லிட்டு திரியுறாரு, என்ன கண்றாவி, இதையெல்லாம் கேட்கணும், பார்க்கனும்னு தமிழனுக்கு தலையெழுத்து, 

இந்த ஆர்டிஓ ஆபீசுல புதுசா எல்எல்ஆர் போடுறவன் எப்படி திரு, திரு ன்னு முழிப்பான், அப்படி ஒரு முழி முழிக்கிறாங்க தமிழ்நாட்டு முதலமைச்சர்கள், அதுல யாரு முதலமைச்சர்னு அவங்களுக்கே தெரியலை, நாமதான் முதலமைச்சரா இல்லேன்னா வேற யாராவாது நாடோடி  முதலமைச்சரான்னு எல்லோருக்குமே டவுட் இருக்கத்தான் செய்யுது, 

ஆனா ஒரு விஷயம் கன்பார்ம், திருப்பி காங்கிரஸ் ஆட்சிக்கு கூட தமிழ் நாட்டுல வந்திரும், ஆனா, இந்த பிஜேபி கண்டிப்பா வராதுங்கிறது கன்பார்ம் ஆகிடுச்சு, 

தமிழ்நாட்டை விட்டுட்டு அவுங்க வேற எங்கியாவது போயி கூத்து நடத்தி பிழைச்சிக்கலாம், அதுதான் அவனுங்களுக்கு நல்லது, ஸ்டாலின், துரைமுருகன் ஒரு பக்கம் காமெடின்னா, இபிஎஸ்-ஓபிஎஸ் இன்னொரு பக்கம் காமெடி, உதிரில பார்த்தா வைகோவும், பாமகவும், விசிக வும், தனி காமெடி டிராக், இவங்களை நம்பித்தான், தமிழ்நாடு, இன்னும் இந்த விவசாயிங்க இவனுங்களை தலைவர்னு நம்புரானுங்க பாருங்க, 

இதுக்கு என்னாங்க சொல்யூசன், கடைசிவரைக்கும் பொது மக்களும் வாட்சப்ப்ள மீம்ஸ் போட்டு ஸ்கோர் ஏத்திகிட்டு இருக்க வேண்டியதுதான், மக்கள் ஒண்ணா சேர்ந்து வேலை பார்த்தாதான் இவனுங்க திருந்துவானுங்க, 

இதுல நடிகர்கள் வேற பண்ற அலம்பலை பார்த்தா கன்றாவியா இருக்கு, பாதிக்கு மேல வரி கட்ட மாட்டானுங்க, சினிமாவுல பேசுற வசனம் நிஜத்துல இருக்காது, தமிழ்நாட்டு ரசிகர்கள் கூமுட்டைங்கன்னு நினைச்சு தினம், தினம் ஒரு படம் காமிக்கிரானுங்க, 

ஸ்டெர்லைட் பிரச்சினையை கொண்டு வந்தானுங்க, அப்புறமா காவிரி மேலாண்மையை தூக்கிகிட்டானுங்க, முதல்ல ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விஷயத்தை நாம சொல்லியே ஆகணும், சும்மா, இந்த சட்டைய கிழிச்சிக்கிறது, வசனம் பேசுறது , இதையெல்லாம் நிறுத்திட்டு, 
மான, ரோசம் இருந்தா, உடனே உங்க மருமகன்கிட்டே சொல்லி சன்டீவி குழுமத்துகிட்டே சொல்லி கர்நாடகாவுல ஓடுற நம்ம ஊர் சானல்ல நிறுத்த சொல்லுங்க பார்ப்போம், அதை விட்டுட்டு அஞ்சுக்கும், பத்துக்கும் கந்து வட்டி வாங்கி கடைய போட்டா, உனக்கு உணர்வில்லையா, உயிரில்லையான்னு அப்பாவி ஜனங்களை உசுப்பேத்தி விட்டு கடைய அடைக்க சொல்ல கூடாது, காமெடி பண்ணிக்கிட்டு இருக்க கூடாது, உங்க திமுக காரங்க எத்தனை பேரு கர்நாடகாவுளே வியாபாரம் செய்வான், அவனையெல்லாம் முதல்ல அந்த ஊரை விட்டு அந்த மாநிலத்தை விட்டு வெளியே வர சொல்லு தலிவரே, அப்பால பாக்கலாம்,  

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்குன்னா தக்காளி சட்னியா?

நம்ம மாநிலம் மாதிரியே வாட்டாள் நாகராஜன் ஒரு காமெடி பீசு, நம்ம ஊரு அப்பாவி தமிழர்களை அடிக்கிராம்ல, உண்மையிலே அவன் ஆம்பளையா இருந்தா, தில் இருந்தா, எங்க தமிழன் உங்க ஊருல ஆரம்பிச்சிருக்கிற சன் குழுமத்தோட சானல் மேல கைய வை பார்ப்போம், வாட்டாள் நாகராஜன் வீரப்பன் இருக்கிற வரைக்கும் வாய திறக்கலை, வீரப்பன் போன பிறகுதான் ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கான், மண்ணுக்கு ஒரு நல்லவன் இருந்தா, அவனை இவனுங்க எல்லாவனும் சேர்ந்து மண்ணுக்குள்ளே அனுப்பிருவானுங்க, வாட்டாள் நாகராஜனுக்கு பகிரங்க சவால், எங்க ஊர்க்காரன் ஆரம்பிச்சிருக்கிற சானலை உன்னால நிறுத்த முடியுமா? உனக்கு உண்மையிலேயே அந்த தில் இருக்கா?

ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ஊர் ஊரா நடக்கிறாரு, மாட்டு வண்டி ஓட்டுறாரு, எல்லாம் சரிதாங்கோ, ஒரு கட்சித்தலைவனுமே மண்வெட்டியை தூக்கி, விவசாயம் செய்யலை, தலைவன் ஒரு விஷயம் செஞ்சா உடனே ஒட்டுமொத்த தொண்டர்களும் அதையே செய்வானுங்க பார்த்திருக்கீங்களா, தலைவன் தண்ணீர் பந்தல் திறந்தா அதையே செய்வானுங்க, தலைவன் தீக்குளிப்பென்னு சொன்ன உடனே இவனுங்க தீக்குளிச்சிருவானுங்க, ஆனா ஏதாவது ஒரு தலைவன் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, இன்னும் பூக்காத கட்சித் தலைவன் எவனாவது ஒருத்தன், ஒரே ஒருத்தன் விவசாயம் செய்ய போறோம், எங்க ஊரு விவசாயிக்கு ஆதரவா தண்ணி இறக்கி கொடுக்க போறோம்னு சொல்லிருக்கானா? ஒருத்தன் கூட கிடையாது, 

ஒருத்தன் டி போடுவான், ஒருத்தன் பக்கோடா விப்பான், ஒருத்தன் பிச்சை எடுப்பான், ஒருத்தன் தெரு, தெருவா வாக்கிங் போவான், ஆனா எவனுமே தமிழ்நாட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வாய திறக்கல, 

எங்கயோ லண்டன்ல, சிங்கப்பூர்ல, மலேசியாவுல இருக்கிற தமிழன் ஸ்டெர்லைட் க்கு எதிரா போராடுரானுங்க, இங்கே உள்ளூர்ல இருக்கிற கீதா ஜீவன் இங்கே களி கிண்டிகிட்டு இருக்கு, இன்னொரு டிக்கெட் என்னடான்னா, ஹனிமூனுக்கு போயிருக்கும் போல, எங்களுக்கும் சொந்த பந்தம் இல்லையா ன்னு ஒரு அமைச்சர் போன்ல கேக்குறான், அப்படீன்னா பதவிய ராஜினாமா செஞ்சிட்டு சொந்த பந்தத்தோட போயிட்டு வா தங்கமே! நீ இங்கே உக்காந்து ஒன்னும் சாதிக்க போறது கிடையாது, 

வேதாந்தா நிறுவனம் நம்மளை பார்த்து கேவலமா, எகத்தாளமா சிரிக்குது, பன்னாடை ஊடகங்கள் எது எதுக்கோ நாலு பேரை உக்கார வச்சு பேசுறானுங்க, ஒருத்தன் கூட வேதாந்தாவுல ஊடகங்கள் விலை போனதை நாலு கட்சிக்காரனை வச்சு, தூத்துக்குடி பொது மக்களை வச்சு பேச வேண்டியதுதானே, ஆக இந்த வேசி ஊடகங்கள் செய்யுற கூத்துக்கு பொது மக்கள் சாகத்தான் வேணும், மக்கள் நீதிமன்ற தடையை மீறினா, கடும்தண்டனை கொடுப்பானுங்க, ஆனா மத்திய அரசு நீதிமன்ற உத்திரவை மீறலாம், பாவம் மத்திய அரசு என்னதான் செய்யும், ஸ்கீம் ங்கிற வார்த்தைக்கு அர்த்தத்தை இன்னும் டிக்சனரியிலே தேடிகிட்டுத்தான் இருக்கானுங்க, கிடைக்க மாட்டேங்குதே! 

இது எல்லாத்தையும், சும்மா, சும்மா வாட்ஸ்அப் ள படிச்சு பார்த்திட்டு சிரிச்சிட்டு போறானுங்க, நம்ம ஊரு இளசுங்க, எல்லோருமே வாட்டாள் நாகராஜனுக்கு சவால் விடுங்க, தில் இருந்தா கீழே இருக்கிற, உங்க ஊருல ஓடுற ஏதாவது ஒரு சானல இழுத்து மூடு பார்ப்போம், அடிச்சு நொறுக்கு பார்ப்போம், 

பாவம் எங்க தளபதி அவங்க அப்பா ஆட்சி பண்ணப்ப கோமாவுல இருந்தாரு போல, ஆனா இப்போ அவருக்கு சுயநினைவு வந்திருச்சு, இப்போ வாங்கடா, என்  தலைவன் சிரிச்சிகிட்டே போராடுவார்டா எங்க தங்க தளபதி, இதுக்கெல்லாம் அசரமாட்டாரு, எங்க தலைவரோட சொந்தக்காரங்க பிள்ளைங்க எவ்வளவு தில்லா உங்க ஊருல இருக்காங்க, உன்னால அவங்கள தூக்க முடியலை, வாட்டாள் நாகராஜனுக்கு தில் இருந்தா, திராணி இருந்தா எங்க ஊரு திமுக காரன் கம்பெனியை, சொந்தக்காரன  தேடி கண்டுபிடிச்சு கைய வச்சு பாரு, அப்போ பாரு என்ன நடக்குதுன்னு? எனக்கு தெரிஞ்சு வாட்டாள் நாகராஜன் ஒரு கட்டப்பஞ்சாயத்து ஆளுன்னு நினைக்கிறேன், அவனும் நம்ம தமிழ்நாட்டு சன்டீவி குழுமத்துகிட்டே கையேந்தி பிச்சை எடுத்திருப்பான்னு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க?  உதயா க்ரூப் ஆப் சானல் மேல கைய வைக்கவே பயப்படுதானே, 


பொழுதுபோக்கு தொலைக்காட்சி
திரைப்படத் தொலைக்காட்சி
இசை தொலைக்காட்சி
செய்திகள் தொலைக்காட்சி
குழந்தைகள் தொலைக்காட்சி
சிரிப்பு தொலைக்காட்சி
அவ்வளவுதாங்க......